Visitor Info

பார்வையாளர் தகவல்

 

நேரம்

காலை 6.30 – இரவு 8.20 – வாரத்தின் 7 நாட்களிலும்
மதியம் 1.20 – மாலை 4.20 – மூடப்படும் (தினமும்)
அபிஷேகம் – காலை 7.40, மதியம் 12.40, மாலை 7.40 (தினமும்)

லிங்க பைரவிக்கு வருவது எப்படி

லிங்கபைரவி, கோயம்புத்தூரிலிருந்து 30 கிமீ மேற்கே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நீலகிரி மலைத்தொடர்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் கோயம்புத்தூர் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை, புதுதில்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிந்து கோயம்புத்தூருக்கு விமான சேவை உள்ளது. இந்தியாவின் பல பெருநகரங்களிலிருந்தும் இதற்கு இரயில் வசதியும் உண்டு. கோவையிலிருந்து லிங்கபைரவிக்கு தொடர்ச்சியான் பேருந்து வசதியும் கால் டாக்ஸி வசதியும் உள்ளது.

கோவையிலிருந்து லிங்கபைரவிக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது: பேருந்து கால அட்டவணையைக் காண் இங்கே க்ளிக் செய்யவும்

முகவரி

ஸ்ரீ யோகினி அறக்கட்டளை,
பூண்டி,
கோயம்புத்தூர்-641114
தமிழ்நாடு, இந்தியா
தொ.பே: 94864 94865, 94433 65631



View Larger Map

வழிகாட்டி

கோவையிலிருந்து உக்கடம் வழியாக பேருர்/சிறுவாணி சாலையில் வரவும். ஆலாந்துரையை அடுத்து இருட்டுப்பள்ளம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பவும். இங்கிருந்து லிங்கபைரவி மேலும் 8 கிமீ தொலைவிலும், இதே சாலையில் பூண்டிக்கு முன் 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வரும் வழியில் தியானலிங்கத்திற்கு வருவதற்கான வழிகாட்டி பலகைகளைப் பார்க்க முடியும்.

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!