லிங்கபைரவி பெண்மையின் முழுமை!
திருமதி. மஞ்சுளா ரமேஷ்
என்னுடையமுப்பத்தியிரண்டுவருடஎழுத்துலகவாழ்க்கையில், என்னுடையபேனாநான்உணர்ந்ததை, அனுபவித்ததைமட்டுமேஎழுதியிருக்கிறது. எங்கேயுமேபுனைந்துரைகள்இருந்ததுஇல்லை. அதிலும்ஆன்மீகப்பாதையில்ஈர்ப்புஏற்பட்டு, அதன்அனுபவங்களைஎழுதஆரம்பித்தபோதுநான்கண்டவற்றை, அனுபவித்தவற்றைமட்டுமேஎழுதியிருக்கிறேன். சொல்லப்போனால்என்ஆன்மீகசத்தியதரிசனத்தைக்கொஞ்சம்குறைத்துச்சொல்லியிருப்பேன். ஏனெனில்முழுமையாகச்சொல்லஎன்னிடம்வார்த்தைஇல்லாமல்போயிருக்கலாம். ஆனால்நான்பார்த்ததை, அனுபவித்ததைமட்டுமேஎழுதியிருக்கிறேன்.
காலங்கள் மாறலாம், நிலைமைகள் வெவ்வேறு விதமாகக் காட்டப்படலாம். ஆனால் என்னை வழிநடத்திச் செல்லும் தெய்வ அருள், எனக்குக் காட்டி அருளியவற்றை மட்டுமே, நான் இந்த சமூகத்திற்கு, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
சென்ற வருடம் கோவையிலுள்ள வெள்ளியங்கிரி சென்ற பயணத்தில், இறங்கும்போது ரொம்பவுமே கஷ்டப்பட்டு விட்டேன். ‘நாம் எவ்வளவோ பயணங்களை மேற்கொண்டு இருக்கிறோம். வடநாட்டுப் பயணங்களின்போது முதல் நாள் இரவு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் நித்திரையென்றால், மறுநாள் இரவு ரோடோரம் ‘டாபா’ கடையில் காரை நிறுத்தி காருக்குள்ளேயெல்லாம் தூங்கி இருக்கிறோமே. ஆனால் இப்போது ஏன் இத்தனை சிரமப்பட்டோம் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறேன்.
இறங்கியபோது பட்ட சிரமம் ஒரு பக்கம் என்றால், சென்னை திரும்பிய பின் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என்னுடைய உடல்நலம் கெட்டது இன்னொரு கதை. அத்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது ஏன் என இன்று வரை அறியேன். மிகக்கடுமையான ‘கேஸ்ட்ரிக்’ பிரச்சினை. அதன் தீவிரம் அதிகமாகும்போது உடல் முழுவதும் அலர்ஜி! உலகில் எங்கும் காணாத அருமையான டிசைன்கள் எல்லாம் உடலில் தோன்றும். (சில சமயம் வியப்பாக இருக்கும், எப்படி இது ஏற்படுகிறது, என்ன மாதிரியான சிஸ்டம் இது என்று) அதற்காக மருந்துகள், யோகா தெரபி என ராஜ உபசாரங்கள்.
குறைவதுபோல இருந்தாலும், திடீரென அதிகரிக்கும். எப்போதும் உடல் முழுக்க ஏதோ ஊசியால் குத்துவது போன்ற அவதி. ஒரு காலகட்டத்தில் மனம் மிகவும் ஆயாசமானது. இப்படியேதான் நம் வாழ்க்கை இருக்குமா என்று, இவற்றினூடே வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருந்தது.
ஒருநாள் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலை தளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, ‘லிங்கபைரவி’ எனும் உருவம் கிடைத்தது. பார்த்து பிரமித்துப் போனேன். அது சத்குருவால் உருவாக்கப்பட்ட லிங்கபைரவி யந்திரம். அதை யாரோ ‘டவுன்லோட்’ செய்து வைத்திருந்தார்கள். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இது என்ன அமைப்பு? தெரியவில்லை. பத்து கைகள், ஒவ்வொன்றிலும் முத்திரை. நீள்உருண்டை வடிவம். மூன்று கண்கள், மூக்குத்தி, வஸ்திரமா என்னது என்று தெரியாமல் கீழே சுற்றுகிற அமைப்பு, கீழே மகிஷன்.
அப்படியே எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. எவ்வளவு அருமையாக, ஈர்க்கக் கூடியதாக இருந்தது. “நீதான் லிங்கபைரவியா” என மானசீகமாக அதனிடம் பேசினேன். என் கணினித் திரையிலும், செல்போன் திரையிலும் முகப்பு உருவமாக மாற்றிக் கொண்டேன். “என்னோடு எப்போதும் இரு நீ!” என அதனிடம்… கட்டளையிட்டேன். இப்படியே அந்த உருவத்தை இரண்டு, மூன்று நாட்கள் இரண்டு திரைகளிலும் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தேன்.
ஆமாம், என் உடலில் ஏற்படும் ‘சுருக், சுருக்’ குத்து எங்கே போச்சு? வேலைகளின் சுமைகளிலே நானே மறந்து போயிருந்த விஷயம் இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் நினைவுக்கு வந்தது. உடம்பிலும் டிசைன் வேலைப்பாடுகள் ஏற்படுவது இல்லை. ‘இது என்னடா அதிசயம், வாழ்க்கை பூரா இப்படித்தான் இருக்குமா’ என பட்ட ஆயாசத்திற்கு ஒரு முடிவா? ‘பின்குத்தல்’ இனி மேல் ஏற்படாதா? கணினித் திரையில் லிங்க பைரவி பத்துக் கைகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆம், அதற்குப் பிறகு அந்தத் துன்பம் எனக்கு ஏற்படவே இல்லை. எப்போதாவது லேசாக டிசைன் எழும்பும். ஆனால் மனதளவில் அதைப் பொருட்படுத்தாத வலிமை ஏற்பட்டதுதான் ஆச்சர்யம். அதைக் கண்டுகொள்ளவே மாட்டேன். அதுவே போய்விடும். மிக அரிதாகத் தோன்றும். அதுவும் ஓரிரு மாதங்களில் சுத்தமாக நின்று விட்டது.
ஐம்பத்தியிரண்டு சக்திபீடங்களை தரிசித்த முழுமையின் பயனாக, இந்த லிங்கபைரவி எனக்கு வந்து வாய்த்தாளோ என சிலிர்ப்புதான் ஏற்பட்டது. மனோநிலையிலும், வாழ்வு சந்தித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளிலும், பிரச்சினைகள் தீருகின்ற விதங்களுமே நினைத்து பிரமிக்கும் படியாகத்தான் ஆனது. என்னோடு கலந்து, என்னைச் சுற்றியும் லிங்கபைரவி வியாபித்து இருக்கிறாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
லிங்கபைரவிப் பிரதிஷ்டையின்போது சத்குரு ‘உலகெங்கும் பெண் தெய்வ வழிபாடு மறைந்தாலும் இந்தியாவில் மட்டும் மகோன்னதமாக தேவி பூஜிக்கப்படுகிறாள். இவளை சக்தி என்றே மிக உயர்வாக வணங்குகிறோம்.
சிவன் என்பது ஆண் தன்மை. சக்தி பெண் தன்மை. சிவன் லிங்கமாகவும், சக்தி தேவியாகவும் வழிபடப்படுகிறார்கள். லிங்க பைரவி வித்தியாசமான வடிவத்தை, குணாதிசயங்களை, பண்பைக் கொண்டவள். இவளை குறிப்பிட்ட வகையில் வழிபடும்போது, நாம் கோரிய அனைத்தையும் தருவாள்.
லிங்கபைரவி குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட வகையில் பூஜை செய்யப்பட வேண்டியவள். ஆராதிக்கப்பட வேண்டியவள். அப்படிச் செய்யும் போதுதான் அவள் வீர்யம் மிகுந்தவளாக இருப்பாள். நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாள்’ என்று கூறினார்.
தியானலிங்கம் ஆன்மீக ஆர்வலர்களுக்கு மிக உயர்ந்த அதிர்வலைகளைத் தருகிறது என்றால், லிங்க பைரவி இக்காலத்திற்கு மிகத் தேவையான ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தருபவளாக எழுந்தருளி இருக்கிறாள். பெண்மையின் முழுமையான தன்மையோடு அவள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், பெண்மைக்கே உரிய தயையும், கருணையும் மிக அதிகமாகவே உண்டு. அதேசமயம் சக்திக்கே உரிய வேகமும், வீர்யமும், ஆவேசமும் உண்டு. எனவே அவளை சரியாக உணர்ந்து பூஜிப்பவர்களுக்கு அவள் தன்னையே தருகிறாள். அப்படி ஒரு கருணாமூர்த்தியாக கோவையிலே வெள்ளியங்கிரி சாரலிலே குடிகொண்டு விட்டாள் லிங்கபைரவி.
இப்படி ஒரு சக்தி பிரதிஷ்டையை யாரும் அனைவருக்கும் முன்பாக செய்வதில்லை. என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதையும் விளக்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொன்றையும் புரியுமாறு கூறி, நமக்கு எதிரேயே பிரதிஷ்டையும் செய்து, நம்மை ஆனந்தப் பரவசத்தில் சத்குரு ஆழ்த்தி இருக்கிறார் என்றால் அவர் எத்தனை கருணாமூர்த்தியாக இருக்க வேண்டும்.
அந்த பாக்கியத்தைப் பெற்ற நாம் இந்த காலகட்டத்தில் இருந்தோம். இந்த இறையருள் தொடரட்டும். லிங்க பைரவி நம்மை காக்கட்டும்!
இதுவரைசிலையின்அழகில்மட்டும்மயங்கிவணங்கிவந்தேன்என்தேவியை …
சரி, தேவியைஒருஉயிராய்நினைத்துஅவளுடன்பயணித்தால்என்ன… என்றுநினைத்ததுதான்தாமதம் …
உடனேஎன்தேவிசீறிஎழுந்துதன்உயிரோட்டத்தைக்காட்டிவிட்டாள்….
அன்றுஎன்தேவிஎனக்குகாட்டியஅருளைஎன்ஐம்புலன்களையும்தாண்டிவார்த்தைகளில்சொல்லத்தெரியாதஒருநிலையில்உணர்ந்தேன்…
எனதுஉடல்எனதுஅடையாளம்எதுவும்நினைவில்இல்லை….
ஆணிஅடித்தார்போல்அவள்முன்னேநின்றேன்… என்னைமுழுவதுமாகஅலசிஎடுத்தார்போல்இருந்தது…
உயிர்வெடித்துபோவதுபோல்இருந்தது, அவள்அன்பின்ஆனந்தத்தைதாங்கிப்பிடிக்கமுடியாமல்…
அவள்அன்புக்கடலில்மூழ்கியதற்கும்அருள்மழையில்நனைந்ததற்கும்நான்ஆனந்தத்தில்கதறிஅழுதகண்ணிர்மட்டுமேசாட்சி…
இன்றும்நனைகிறேன்… அவள்அருள்மழையில்….
தேவி … பைரவி ……
– ஹேமலதா, சென்னை