LunarHinduNewYear-Offering

Kalabhairava Karma & Shanthi

காலபைரவ கர்மா
(Rituals for the deceased)

 

“மக்கள் ஆனந்தமாய் வாழ்வதை நாம் விரும்புகிறோம். ஆனந்தமாக வாழாவிட்டால், குறைந்தது அமைதியாகவாவது இறக்கவேண்டும். அதையும் அவர்கள் செய்யாவிட்டால், இறந்தபின் அவர்களுக்கு ஏதோவொன்றை நாம் செய்ய விரும்புகிறோம்.”
– சத்குரு


Download the English eflyer

Download the Tamil eflyer

 

காலபைரவ சாந்தி தேதி (2022 & 2023)

26 ஆகஸ்ட் 2022, வெள்ளி

25 செப்டம்பர் 2022, ஞாயிறு, மஹாளய அமாவாசை

24 அக்டோபர் 2022, திங்கள்

23 நவம்பர் 2022, புதன்

22 டிசம்பர் 2022, வியாழன்

21 ஜனவரி 2023, சனி, தை அமாவாசை

19 பிப்ரவரி 2023, ஞாயிறு

21 மார்ச் 2023, செவ்வாய்

19 ஏப்ரல் 2023, புதன்

18 மே 2023, வியாழன்

17 ஜூன் 2023, சனி

16 ஜூலை 2023, ஞாயிறு

15 ஆகஸ்ட் 2023, செவ்வாய், ஆடி அமாவாசை

14 செப்டம்பர் 2023, வியாழன்

13 அக்டோபர் 2023, வெள்ளி, மஹாளய அமாவாசை

12 நவம்பர் 2023, ஞாயிறு

12 டிசம்பர் 2023, செவ்வாய்

 

காலபைரவ கர்மா, லிங்கபைரவி,
ஸ்ரீ யோகினி அறக்கட்டளை,
ஈஷான விஹார் அஞ்சல்,
கோவை-641114

 

கவனிக்கவும்:

பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி செயல்முறைகளில் பங்கேற்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களது நல்வாழ்விற்கு இது துணை செய்யாது.


 

இறந்தவர்களுக்கான காலபைரவ கர்மா சடங்குகள்

இறந்தவர்களுக்கான ஒரு செயல்முறை இது.

ஒருவர் இறந்தவுடன் தன் நிர்ணயிக்கும் மனதையும் இழந்துவிடுகிறார். எனவே இறக்கும்போது எந்தவிதமான உந்துதல்கள் இருந்ததோ, அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பல மடங்காகப் பெருகும். அவருடைய உந்துதல் இனிமையான உணர்வுடன் இருந்தால், அந்த இனிமை உணர்வு பல மடங்காகும். உந்துதல் சோகமான உணர்வுடன் இருந்தால், சோகமான உணர்வு பல மடங்காகும். இதனால்தான், ஒரு மனிதர் இறக்கும்போது, அவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.

அவர்கள் செல்லும் புது இடம், சிறந்த இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டிருக்கிறது.

எனவே, அவர்கள் இறக்கும் அந்த கடைசி நேரத்திலோ, அல்லது அதற்கடுத்த சில குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ, நாம் இறக்கும் அவ்வுயிரை அணுகி அது தனக்குள் இனிமையை உணருமாறு பார்த்துக்கொள்ள முடியும்.

ஒரு சொட்டு இனிமையை அவருக்குள் புகுத்திவிட்டால் கூட, சரி-தவறு என நிர்ணயிக்கும் மனம் இல்லாத காரணத்தால், அந்த இனிமை அவருக்குள் லட்சம் மடங்காக பெருகிவிடும். எனவே அந்த உயிருக்குள் இனிமையை ஊட்டுவதைத்தான் நாம் ஒரு செயல்முறையாக செய்கிறோம். இதுதான் காலபைரவ கர்மாவின் அடிப்படை.

காலபைரவ சாந்தி என்னும் செயல்முறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இறப்பு நேர்ந்தபின், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த செயல்முறைகளுக்காக தேவி லிங்கபைரவி இருக்கும் இடம் சக்தித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காலபைரவ கர்மா

காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும்.

தேவையானவை:

இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை & சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம். இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின்போது அருகில் இருக்கவேண்டும். இந்த செயல்முறைகள் லிங்கபைரவியில் நடைபெறும். செயல்முறை முடிந்தபின், உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவிட்டால், முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலும்)

நிபந்தனைகள்:

இயற்கை மரணமாக இருந்தால் 50 வயதுக்கு மேல்- 14 நாட்களுக்குள்
50 வயதுக்கு கீழ் 48 நாட்களுக்குள்
84 வயதுக்கு மேல் (1000 முழுநிலவு) – எப்போது வேண்டுமானாலும்
இயற்கை மரணமாக இல்லாமல் விபத்து, தற்கொலை போன்று இறந்திருந்தால் 33 வயதுக்கு மேல் – 48 நாட்களுக்குள்
33 வயதுக்கு கீழ் – 90 நாட்களுக்குள்
இறந்து பிறந்த அல்லது கருவில் கலைந்த குழந்தைகளுக்கு (48 நாட்களுக்கு மேலான கர்ப்பம்) – கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட தாயாரின் புகைப்படம்.

காலபைரவ சாந்தி

காலபைரவ சாந்தி ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும். (See our Lunar Calendar)

தேவையானவை:

இறந்தவரின் ஒரு புகைப்படமும், பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்த தேதியும் தேவைப்படுகிறது. செயல்முறையின்போது நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்களின் முன்னோர்கள் அல்லது இறந்த உறவினர்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்து அத்துடன் பிறப்பு மற்றும் இறப்பு தேதியையும் குறிப்பிட்டு இ-மெயிலில் அனுப்பலாம். பிறந்த தேதி சரியாக தெரியவிட்டால், பிறந்த வருடத்தையாவது குறிப்பிட வேண்டும். இறந்த வருடமும் தெரியாதபட்சத்தில், இறந்தவர்களின் பெற்றோர் பெயர்களை (தாய் & தந்தை இருவரின் பெயரும்) குறிப்பிடலாம்.

நன்கொடையை லிங்கபைரவி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது “Shri Yogini Trust” என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகவோ செலுத்தலாம். காலபைரவ சாந்தியை வருடத்திற்கு ஒருமுறை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 10 வருடங்களுக்கு சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வருட சாந்தி மகாளய அமாவாசையன்று செய்யப்படும்.

மகாளய அமாவாசை

இந்த தனித்துவம் வாய்ந்த அமாவாசை இரவில், நம் முன்னோர்களுக்காகவும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்காகவும் நிகழ்த்தப்படும் இந்த செயல்முறை, நமக்கு குடும்ப நலனையும் வழங்குகிறது. இந்த ஆன்மீக செயல்முறை, ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையன்று மண்ணுலகம் விட்டு மறைந்த குடும்ப உறவுகள் மற்றும் அன்பிற்குரியவர்களின் நினைவாக நிகழ்த்தப்படுகிறது.

இவ்வருடம், மகாளய அமாவாசை 25 செப்டம்பர், 2022, ஞாயிற்றுக்கிழமை லிங்கபைரவியில் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறை வெகு சிறப்பாக நிகழவிருக்கிறது.
மகாளய அமாவாசையன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சிறப்பு அர்ப்பணிப்பாக லிங்கபைரவிக்கு அக்னி அர்ப்பணம் நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பித்ருக்களுக்கும் (நம் மூதாதையர்), இறந்த குடும்ப உறவுகளுக்கும் காலபைரவ சாந்தி நடைபெறவிருக்கிறது.

Submit Registration form: (இந்தியாவிற்குள் மட்டுமே)

காலபைரவ கர்மா பதிவு செய்ய: bhairavi.co/kbk-register
காலபைரவ சாந்தி பதிவு செய்ய: bhairavi.co/kbs-register

மேலும் தகவல்களுக்கு,

மின்அஞ்சல்: info@lingabhairavi.org, kbprocess@lingabhairavi.org
அலைபேசி: +91 83000 83111
இணையதள முகவரி: www.lingabhairavi.org

 

இறந்தவர்கள் நற்கதி அடைய – காலபைரவ சாந்தி

மறுபிறவி எடுத்தவருக்கு காலபைரவ சாந்தி செய்யலாமா?

நல்ல மரணம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!