பௌர்ணமி பூஜை & லிங்கபைரவி மஹா ஆரத்தி
ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ள ஆறு பேர் அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குழு லிங்கபைரவியின் முன்னிலையில் அமர்ந்து தேவிக்கான அர்ப்பணைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவதோடு தேவியின் அருளையும் பெறுகின்றனர். அபிஷேகத்தின் போது நவநீதம் (வெண்ணெய்), ஹரித்ரம் (மஞ்சள்), சந்தனம், குங்குமம், வஸ்த்ரம், பத்ரம் (வேப்ப இலை), புஷ்பம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), ஸ்ரீபலம் (தேங்காய்) ஆகிய 11 அர்ப்பணைகள் தேவிக்கு வழங்கப்படுகின்றன. இந்த விரிவான அர்ப்பணைகள் நடக்கும்போது, தீப ஆராதனையும் நடக்கும். அதன்பிறகு, லிங்கபைரவி உற்சவமூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரம்மாண்டமான மஹா ஆரத்தியுடன் நிறைவு பெறும். இந்த அர்ப்பணத்தின்போது உருவாகும் சக்திமிக்க சூழ்நிலை ஒருவரது குடும்பத்தின் பரிபூரண நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும், வெற்றிக்கும், வளத்துக்கும் உறுதுணையாக இருக்கும். அபிஷேக அர்ப்பணத்தை உங்கள் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செய்ய முடியும்
Visit our online Lunar calendar for upcoming Maha Arathis.