LunarHinduNewYear-Offering

Offerings

Devi Offerings

Various offerings are conducted in Devi’s abode to allow devotees to benefit from the Devi’s abundant Grace.

பௌர்ணமி பூஜை & லிங்கபைரவி மஹா ஆரத்தி

ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ள ஆறு பேர் அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குழு லிங்கபைரவியின் முன்னிலையில் அமர்ந்து தேவிக்கான அர்ப்பணைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவதோடு தேவியின் அருளையும் பெறுகின்றனர். அபிஷேகத்தின் போது நவநீதம் (வெண்ணெய்), ஹரித்ரம் (மஞ்சள்), சந்தனம், குங்குமம், வஸ்த்ரம், பத்ரம் (வேப்ப இலை), புஷ்பம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), ஸ்ரீபலம் (தேங்காய்) ஆகிய 11 அர்ப்பணைகள் தேவிக்கு வழங்கப்படுகின்றன. இந்த விரிவான அர்ப்பணைகள் நடக்கும்போது, தீப ஆராதனையும் நடக்கும். அதன்பிறகு, லிங்கபைரவி உற்சவமூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரம்மாண்டமான மஹா ஆரத்தியுடன் நிறைவு பெறும். இந்த அர்ப்பணத்தின்போது உருவாகும் சக்திமிக்க சூழ்நிலை ஒருவரது குடும்பத்தின் பரிபூரண நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும், வெற்றிக்கும், வளத்துக்கும் உறுதுணையாக இருக்கும். அபிஷேக அர்ப்பணத்தை உங்கள் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செய்ய முடியும்.learn more…


கோதானம்

செல்வம், வலிமை, செழிப்பு, தன்னலமற்ற தானம் மற்றும் சுகமான உலகியல் வாழ்க்கை இவற்றின் அடையாளமாகத் திகழும் பசுவை தேவிக்கு தானமாக அளிப்பது, தேவியின் அருளைப் பெறுவதற்கு மிகப் புனிதமான வழி இது.


Thaali Arpana

Women with marital problems can offer their thaali/mangal sutra to plead for Devi’s Grace and compassion. This Thaali Arpana is made only on Pournami days, and will be kept at the sanctum in Devi’s Grace for one month, after which it can be collected.


கேஷ அர்ப்பணம்

தேவிக்கு முடி காணிக்கையாக அளிப்பது. தன் ஒரு பகுதியாக உள்ள ஒன்றை தேவிக்கு வழங்குவது சரணடைதலைக் குறிக்கிறது. இதனால் ஒருவர் உடல் ஆரோக்கியம் மற்றும் பிற நலன்களைப் பெறுகிறார்.


Mangalya Bala Sutra

A consecrated turmeric-dyed thread with a turmeric root that can be offered by tying it around the Trishul. This offering ensures a long and prosperous life of one’s spouse.


தேவி அபய சூத்ரா

இது பிரதிஷ்டை செய்யப்பட்ட நூல். இதைக் கைகளில் அணிந்து கொள்வது ஒருவரின் லட்சியங்கள் பூர்த்தியடையவும், பய உணர்வுகளில் இருந்து விடுபடவும் துணை செய்யும். இதனால் ஒருவர் தன் முழுத் திறமைக்கேற்ப வாழ முடியும். பெண்கள் இடது மணிக்கட்டிலும் ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிய வேண்டும்.


தேவி நேத்ர அர்ப்பணம்:

பொருள் தன்மையின் எல்லைகளையும் பிரபஞ்சத்தின் இருமை நிலைகளையும் கடந்து செல்வதன் அடையாளமாக மூன்றாவது கண் குறிப்பிடப்படுகிறது. லிங்கபைரவி திருக்கோயிலில், மூன்றாவது கண்ணை அர்ப்பணம் அளிக்கக்கூடிய வாய்ப்பு, அனைத்து பக்தர்களுக்கும், பல வகைகளில் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் விருப்பங்களையும் ஆசைகளையும் நேத்ர அர்ப்பணம் மூலம் தேவியின் மூன்றாவது கண்ணுக்குச் சமர்ப்பிக்க முடியும்.
தேவி நேத்ர அர்ப்பணம், பித்தளை மற்றும் செம்பால் ஆன கண், பித்தளை மற்றும் வெள்ளியால் ஆன கண், வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன கண், வெள்ளி மற்றும் வைரத்தால் ஆன கண் என்று பல வடிவங்களில் அர்ப்பணிக்க முடியும். பக்தர்கள் தேவி மந்திரத்தைக் கற்றுக்கொண்டு தினமும் உட்சாடணம் செய்து வந்தால், அர்ப்பணத்தின் பலன்கள் மேலும் அதிகரிக்கும். தேவிக்கு வழங்கப்பட்ட நேத்ர அர்ப்பணம் அடுத்து வரும் பௌர்ணமி முடியும் வரை லிங்கபைரவி திருக்கோயிலிலேயே வைத்திருக்கப்படும். பிறகு அர்ப்பணித்தவர் அதைப் பெற்று தங்கள் வீட்டில் உள்ள புனிதமான இடத்தில்

Annadanam

An important and generous custom of offering food to all, a symbol of sharing that which sustains life You can make this auspicious offering to honor and celebrate special occasions such as weddings, birthdays, anniversaries, engagements, and memorials, or on any day of your choice.


லிங்கபைரவி வஸ்திரம்

தேவி வஸ்திரம் ஒருவரை எதிர்மறை ஆதிக்கத்தில் இருந்து காத்து நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய சக்தி வாய்ந்தது. முக்கோண வடிவில் உள்ள இந்த வஸ்திரத்தை ஒருவர் தன் கழுத்தைச் சுற்றியோ அல்லது தலையைச் சுற்றியோ அணிந்து கொள்ளலாம், அல்லது பூஜையறையிலோ, வீட்டின் முன்புறமோ, பணியிடத்திலோ அல்லது தனது வாகனத்திலோ வைத்துக்கொள்ளலாம்.


Abhishekam

A set of 11 offerings made three times a day: at 7:40 am, 12:40 pm and 7:40 pm, in a sacred ambiance of gratitude, to appeal to the Devi’s Grace. Abhishekam can be offered on any given day, or on a particular special day or occasion in one’s life. At the end of the Abhishekam, Aarti is shared with everyone, and the offerings made are given back as Prasad.


அர்ப்பணங்கள்

லிங்கபைரவி அர்ப்பணங்கள் என்பது மகிழ்ச்சியுடன் தேவியிடம் சரணடைவது, தேவிக்கு தன்னையே பக்திநிலையில் சமர்ப்பித்து அவளது அருளுக்கு பாத்திரமாவது. ஒரு பக்தர் உலகியல் இன்பங்களை பெற்று, அனுபவிக்க விரும்பினாலும் சரி அல்லது அவற்றை கடந்து செல்ல விரும்பினாலும் சரி, அதை வழங்குவதில் தேவிக்கு நிகர் அவளே.


Mala Arpana

A decorative flower garland offering can be made daily, on any day or on special days, in appreciation, to adorn Devi and receive her overflowing Grace.


நெய் தீபம்

தேவிக்கு அர்ப்பணையாக வழங்கப்படும் நெய் விளக்கை, லிங்கபைரவி திருக்கோவிலின் உட்புறம் உள்ள திரிசூலம் பகுதியில் ஏற்றிவைக்கலாம். தேவியின் அருளுக்கு முழுமையாகச் சரணடைவதை இது குறிக்கிறது.


Pushpam

An offering of fragrant flowers as a gesture of appreciation and gratitude towards Devi.


தேவி வஸ்திரம்

தீய சக்திகளை விரட்ட உதவும் இந்த புனிதமான சிவப்பு நிற வஸ்திரத்தை தலையிலோ, கழுத்திலோ கட்டிக் கொள்ளலாம் அல்லது பாதுகாப்பு தேவைப்படும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!