Linga Bhairavi
பக்தியில் அவளை நாடிடுங்கள்
பரிவின் சமுத்திரம் அவளேவீழ்ச்சியில் அவளை நாடிடுங்கள்
விழுத்துணை என்றும் அவளேதீவிர விருப்பத்தில் நாடிடுங்கள்
ஈர்த்திடும் கருணையும் அவளேகுழப்பத்தில் அவளை நாடிடுங்கள்
தெளிவைத் தருபவள் அவளேJai Bhairavi Devi
Love & Blessings
-Sadhguru

இருண்ட இரவின் கருமை , உங்கள் இதயத்தின் ஆழத்தையே ஊடுருவும் பிரகாசமான கண்கள், உடல்தன்மைக்கும் அப்பாற்பட்ட பரிமாணத்தை உணரும் சக்தி படைத்த அற்புதமாய் மின்னும் மூன்றாவது கண், வேண்டுவோர்க்கு எல்லையற்ற அருளை வழங்கும் கருணைக் கரங்கள், கம்பீரத்தை வெளிப்படுத்தும் தங்க சேலை – இவற்றையெல்லாம் கொண்டுள்ள லிங்கபைரவி, பெண்சக்தியின் ஓர் அற்புதமான ஆன்மீக வெளிப்பாடு. யாருடனும் ஒப்பிட முடியாத பெண் தெய்வமான இவள் தனித்துவமாக லிங்க வடிவம் கொண்டிருக்கிறாள்.
தேவி உறையும் இடமான லிங்கபைரவி திருக்கோவில், முக்கோண வடிவில், கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள தியானலிங்க திருக்கோவிலின் அருகில் அமைந்துள்ளது.
எட்டடி உயரமுள்ள இந்த தேவி, பாதரசத்தை அடிப்படையாகக் கொண்ட சக்தி வாய்ந்த வடிவமாய் சத்குரு அவர்களால், பிராணப் பிரதிஷ்டை முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். அரிய ஆன்மீக செயல்முறையான பிராணப் பிரதிஷ்டை என்பது கல்லையும் கடவுளாக்கும் ஒரு அரிய ஆன்மீக செயல்முறையாகும்.
கருணைமிக்கதாய், உக்கிரமிக்கதாய், சக்திமிக்கதாய், வண்ணமிக்கதாய் இந்தத் தெய்வம் அமைந்திருக்கிறாள். இயல்பும் மனிதமும் நிரம்புவதாய், தாய்மையின் அம்சத்துடன், பெண் தன்மையின் முழுமையாகவும் உச்சசக்தியின் பாகமாகவும் விளங்கும் லிங்கபைரவி தனித்தன்மையும் பரிவும் கொண்டவளாக இருக்கிறாள்.
லிங்கபைரவி, தெய்வீகத்தின் மூன்று அடிப்படை பரிமாணங்களை இணைப்பவளாகவும் அதே நேரத்தில் இந்த பிரபஞ்சத்தின் அடிப்படையான மூன்று தன்மைகளை தன்னுள் கொண்டவளாகவும் இருக்கிறாள். ஒரு பக்தர் பொருள்தன்மையிலான பலன்களை அடைய விரும்பினாலோ அல்லது அதைக் கடக்க விரும்பினாலோ – பக்தரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் சரி – தேவி அதற்குத் துணையிருப்பாள்.
சக்தி, உடல் உறுதி, செல்வம், தீவிரம், அறிவு அல்லது பொருள்தன்மையைக் கடப்பது என்று எதுவாக இருந்தாலும் இந்த அனைத்தையும் அல்லது அதற்கும் மேலும் தருபவளாக, வாரி வழங்கும் முடிவான தெய்வமாக தேவி விளங்குகிறாள்.
லிங்கபைரவியின் சக்திநிலை, மனித அமைப்பின் மூன்று அடிப்படையான சக்கரங்களை உறுதிபடுத்துவதன் மூலம் ஒருவரின் உடல், மனம், மற்றும் சக்தி நிலைகள் ஸ்திரப்படுகிறது.
லிங்கபைரவியின் வலிமையான சக்திநிலை, வாழ்க்கையை சிரமமின்றி வாழ பக்தர்களுக்கு துணை நிற்கிறது. மேலும் பொருள்தன்மையின் அம்சங்களான ஆரோக்கியம், வெற்றி, மற்றும் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மேன்மையடைகிறது.
வாழ்க்கையை தீவிரமாக வாழ விரும்புபவர்களுக்கு, தேவியின் இருப்பும் அருளும் துணை நிற்கும். ஒருவர் தேவியின் அருள் தமக்குள் செயல்பட அனுமதித்தால் பொருள் தன்மையை கடந்து செல்லவேண்டும் என்கிற ஏக்கம் அவருக்குள் இயல்பாகவே ஏற்படும்.
ஆன்மீக நலத்தை நாடுபவர்களுக்கு, அப்பாதையில் உள்ள இடர்களை அகற்றி, உச்சக்கட்ட விடுதலையைப் பெற தேவி பரிவோடு வழி செய்வாள்.