LunarHinduNewYear-Offering

Devi Yantras & Gudis

 

Devi Yantras & Gudis

தேவியின் இருப்பு மற்றும் அருளை தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பெற விரும்புபவர்களுக்காக லிங்கபைரவி யந்திரங்கள் மற்றும் சிறிய அளவிலான கோவில்கள் வழங்கப்படுகின்றன. தீவிரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கபைரவி யந்திரங்களும், சிறிய அளவிலான கோவில்களும் லிங்கபைரவியின் பிரதிபலிப்பாக இருந்து, தேவியின் அருளை தொடர்ந்துபெற்று பயனடைய உதவுகின்றன.
பாரம்பரியமாகவே, சில பிரத்தியேகமான பலன்களைப் பெற, யந்திரங்கள் வடிவமைக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இந்த லிங்கபைரவி யந்திரங்களும் சிறிய அளவிலான கோவில்களும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு பன்மடங்கு பலன்களை வழங்குவதாகவும் இருக்கிறது.

லிங்கபைரவி யந்திரம்

லிங்கபைரவி யந்திரம் என்பது, தனித்துவமான வலிமையான சக்தி வடிவமாக, உங்கள் வீடுகளில் வைத்துக் கொண்டு உள் மற்றும் வெளிநலன்களைப் பெறும்படியாக, சத்குரு அவர்களால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கபைரவி யந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. பாதரசத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரோட்டமான லிங்கம் என்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட பைரவி யந்திரம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டுமே, 19 x 15 அங்குலம் அளவுள்ள, பாங்குடன் செதுக்கப்பட்டுள்ள கருங்கல் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

லிங்க பைரவி அவிக்ன யந்திரம்

லிங்கபைரவி அவிக்ன யந்திரம் என்பது, சத்குரு அவர்களால், வலிமையான சக்தி வடிவமாக, பரந்த இடங்களில் வைத்து பயன்பெறும்படியாக, வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த யந்திரத்தை 3000 ச.அடிக்கும் அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்புகள், வணிகவளாகம், பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் போன்ற பரந்த இடங்களில் வைத்துக்கொள்ள முடியும். இந்த யந்திரம் தனிப்பட்ட நல்வாழ்வையும் பொருள் வளத்தையும் அளிக்கிறது.
இந்த லிங்க பைரவி அவிக்ன யந்திரம், பாதரசத்தை அடிப்படையாகக்கொண்ட உயிரோட்டமான லிங்கம் என்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட பைரவி அவிக்ன யந்திரம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்விரு பகுதிகளுமே, 2½ x 2½ அடி அளவுள்ள, பாங்குடன் செதுக்கப்பட்ட கருங்கல் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

லிங்க பைரவி குடி

லிங்க பைரவி குடி என்பது, சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான தேவி கோவில். இது, பக்தர்கள், அவர்கள் எங்கே இருந்தாலும், தங்களை தேவியுடன் தொடர்புபடுத்திக் கொள்ள உதவுகிறது. மற்றும் தேவியின் மீதுள்ள பக்தியை மேம்படுத்திக் கொள்ள ஒரு அஸ்திவாரமாக செயல்படுகிறது. 8செ.மீ x 8செ.மீ x 8செ.மீ அளவிலான இந்த லிங்கபைரவி குடிக்கு சிறிய இடமே போதும். உங்கள் வீட்டில் அல்லது பணியிடத்தில் ஒரு சிறிய இடம் அல்லது உங்கள் வாகனத்தில் கூட பொருத்திக் கொள்ள முடியும்.

For more information please contact us by email at yantra@lingabhairavi.org or by phone at
+91 844 844 7708.

லிங்கபைரவி யந்திரம்


லிங்க பைரவி அவிக்ன யந்திரம்


லிங்க பைரவி குடி


லிங்க பைரவி குடி

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!