LunarHinduNewYear-Offering

Devi Rituals

Devi Rituals

Various rituals are conducted at the Linga Bhairavi to allow devotees to benefit from the Devi’s abundant Grace. These unique rituals assist in every step that one takes in one’s life, from birth and death, to everything in-between. These rituals are designed to ensure that every life situation becomes a possibility to be touched by the Divine.

தாக நிவாரணம்

பிரதிஷ்டை செய்யப்பட்ட நீரை, லிங்கபைரவியின் பிரகாரத்தில் இருக்கும் புனிதமான ஆலமரத்துக்கு சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனங்களுடன் ஊற்றுவதன் மூலம் எந்த ஒரு தீவிர ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் தம்பதிகள் இந்த அர்ப்பணத்தைச் செய்யலாம். இந்த அர்ப்பணம் ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும்.

சர்ப்ப சேவை

தேவி தலத்தில் இருக்கும் பின்னிப் பிணைந்துள்ள இரு தெய்வீகப் நாகங்களுக்கு, உறவு நிலையில் உள்ள இருவர், தங்கள் உறவு மேம்பட வேண்டி, இந்த சேவையை செய்யலாம். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டி இருக்கும் தம்பதிகள் இந்த அர்ப்பணத்தைச் செய்யலாம். மேலும் நாகதோஷத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து விடுபடவும் இந்த அர்ப்பணம் உதவுகிறது.

Sarpa Seva is also available for those seeking to ward off naga doshas (certain planetary positions that may cause negative effects), particularly marital obstacles, major hurdles, lack of prosperity or progress, and chronic ill health.

க்ளேஷ நாஷன க்ரியா

தீவினைகளை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த செயல்பாட்டினை தேவியின் முன்னிலையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்து வருவது, ஒருவரது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும், தன்னை உயர்ந்த சாத்தியங்களுக்கு உட்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

பைரவி புண்ய பூஜை

வீட்டின் கிரஹப்பிரவேச வைபவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த செயல்முறை, நீங்கள் வசிக்கப் போகும் இடத்தை உயிர்ப்புள்ளதாகவும், அதிர்வுகள் மிக்கதாகவும் ஆக்கும். இந்த பூஜை புதிய வீடுகளுக்கும், பழைய வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும், மற்ற கட்டிடங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது.
யந்திரங்கள் மற்றும் வீட்டுப் பூஜைகள் பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: yantra@lingabhairavi.org

பௌர்ணமி பூஜை & லிங்கபைரவி மஹா ஆரத்தி

ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ள ஆறு பேர் அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குழு லிங்கபைரவியின் முன்னிலையில் அமர்ந்து தேவிக்கான அர்ப்பணைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவதோடு தேவியின் அருளையும் பெறுகின்றனர். அபிஷேகத்தின் போது நவநீதம் (வெண்ணெய்), ஹரித்ரம் (மஞ்சள்), சந்தனம், குங்குமம், வஸ்த்ரம், பத்ரம் (வேப்ப இலை), புஷ்பம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), ஸ்ரீபலம் (தேங்காய்) ஆகிய 11 அர்ப்பணைகள் தேவிக்கு வழங்கப்படுகின்றன. இந்த விரிவான அர்ப்பணைகள் நடக்கும்போது, தீப ஆராதனையும் நடக்கும். அதன்பிறகு, லிங்கபைரவி உற்சவமூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரம்மாண்டமான மஹா ஆரத்தியுடன் நிறைவு பெறும். இந்த அர்ப்பணத்தின்போது உருவாகும் சக்திமிக்க சூழ்நிலை ஒருவரது குடும்பத்தின் பரிபூரண நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும், வெற்றிக்கும், வளத்துக்கும் உறுதுணையாக இருக்கும். அபிஷேக அர்ப்பணத்தை உங்கள் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செய்ய முடியும்.

தேவி ஆராதனை

ஒவ்வொரு வருடமும் தன்ய பௌர்ணமி (தைப்பூசம்) அன்று லிங்கபைரவியின் பிரதிஷ்டை தினத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் ஆராதனையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் தேவிக்கு பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்டு கொண்டாடப்படும்.

மஹாளய அமாவாசை

அன்றைய சக்தி வாய்ந்த நள்ளிரவுப் பொழுதில், இறந்தோருக்கான சிறப்பு வருடாந்திர காலபைரவ சாந்தி நடத்தப்படும். இது இறந்தவர் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

நவராத்திரி

தெய்வீகத் தாயின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் ஒன்பது சக்தி வாய்ந்த இரவுகளாக நவராத்திரி விளங்குகிறது. இந்த 9 நாட்களில் தேவியோடு இருப்பது, ஒருவரது நல்வாழ்வுக்கும் மற்றும் இயற்கையின் கருணையினை உள்வாங்கிக் கொள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தேவியின் அருட்கருணைக்குப் பாத்திரமாவதற்கு இது மிக உகந்த காலம்.

தேவி வஸ்திரம்

தீய சக்திகளை விரட்ட உதவும் இந்த புனிதமான சிவப்பு நிற வஸ்திரத்தை தலையிலோ, கழுத்திலோ கட்டிக் கொள்ளலாம் அல்லது பாதுகாப்பு தேவைப்படும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்

தேவி பதக்கம்

பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த செம்பு/வெள்ளி/தங்க தேவி வடிவங்களை ஒருவர் எப்போதும் அணிந்து கொள்ளலாம்.

பைரவி விளக்குகள்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பாரம்பரிய விளக்குகளை தினந்தோறும் உங்கள் இல்லம் அல்லது அலுவலகத்தில் ஏற்றி வைத்து தேவியின் அருளுக்கும், இருப்புக்கும் பாத்திரமாகுங்கள்.

தேவி மஞ்சள் மற்றும் குங்கும பிரசாதம்

தேவியின் குங்குமத்தை ஒருவர் தனது நெற்றிப் பொட்டில் (ஆக்ஞா சக்கரம்) வைத்துக் கொள்வது அவரது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நன்மையையும், நல்வாழ்வையும் வழங்கும். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் உகந்தது.

தேவி பிரசாதம்

தேவியின் ஆசியோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த பிரசாதத்தை ஒருவர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று அனைவருக்கும் வழங்கி அனைவரும் தேவியின் ஆசியை பெறுமாறு செய்யலாம்.

யந்திரங்கள் மற்றும் குடிகள்

தேவியின் முன்னிலையில், அவளது அருட்குடையின் கீழ் வாழ விரும்புபவர்கள், தங்களது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வைத்துக் கொள்ளும் வகையில் பைரவி யந்திரங்கள் (லிங்கபைரவி யந்திரம் மற்றும் அவிக்ன யந்திரம்) மற்றும் லிங்கபைரவி குடி உருவாக்கப்பட்டுள்ளன. தேவியின் மறு பிம்பமாக, உயிரோட்டத்துடன் உள்ள இந்த யந்திரங்களின் மூலம் ஒருவர் எப்போதும் தேவியின் அருளோடு தொடர்பு கொண்டு, நற்பலன்களைப் பெற முடியும்.

Wedding Rituals

Marriages (Vivahas) and wedding anniversaries (Shastipoortis at the 60th birthday of the husband) can be celebrated in the Presence and Grace of Linga Bhairavi. The couples adorn each other with beautiful garlands, especially made for the occasion. During the wedding ceremony which is conducted in a close darshan, a moving and powerful Bhairavi chant enhances the couple’s receptivity to Devi’s Grace.

A wedding with full rituals includes garland exchange and Vilakku Seva, Daha Nivaranam, and Sarpa Seva (with kumkum). The wedding can be customized according to the couple’s preferences.

விளக்கு சேவா

லிங்கபைரவியின் கர்ப்பக் கிரகத்தில் உள்ள 111 நெய் விளக்குகளை அல்லது வெளியே இருக்கும் 1008 விளக்குகளை ஏற்றி வைப்பது. இதன் மூலம் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும், வருங்கால சந்ததியினருக்கும் சுபிக்ஷம், நல்வாழ்வு, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும்.

காது குத்துதல்

லிங்கபைரவி திருக்கோயிலில், உங்கள் குழந்தைக்கு காது குத்தும் வைபவம் நிகழ்த்தலாம். இந்த வைபவத்தின்போது குழந்தையின் சக்திநிலையும் தூய்மையடைகிறது. தேவியின் அருளை அந்தக் குழந்தை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு.

தேவி நேத்ர அர்ப்பணம்

பொருள் தன்மையின் எல்லைகளையும் பிரபஞ்சத்தின் இருமை நிலைகளையும் கடந்து செல்வதன் அடையாளமாக மூன்றாவது கண் குறிப்பிடப்படுகிறது. லிங்கபைரவி திருக்கோயிலில், மூன்றாவது கண்ணை அர்ப்பணம் அளிக்கக்கூடிய வாய்ப்பு, அனைத்து பக்தர்களுக்கும், பல வகைகளில் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் விருப்பங்களையும் ஆசைகளையும் நேத்ர அர்ப்பணம் மூலம் தேவியின் மூன்றாவது கண்ணுக்குச் சமர்ப்பிக்க முடியும்.
தேவி நேத்ர அர்ப்பணம், பித்தளை மற்றும் செம்பால் ஆன கண், பித்தளை மற்றும் வெள்ளியால் ஆன கண், வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன கண், வெள்ளி மற்றும் வைரத்தால் ஆன கண் என்று பல வடிவங்களில் அர்ப்பணிக்க முடியும். பக்தர்கள் தேவி மந்திரத்தைக் கற்றுக்கொண்டு தினமும் உட்சாடணம் செய்து வந்தால், அர்ப்பணத்தின் பலன்கள் மேலும் அதிகரிக்கும். தேவிக்கு வழங்கப்பட்ட நேத்ர அர்ப்பணம் அடுத்து வரும் பௌர்ணமி முடியும் வரை லிங்கபைரவி திருக்கோயிலிலேயே வைத்திருக்கப்படும். பிறகு அர்ப்பணித்தவர் அதைப் பெற்று தங்கள் வீட்டில் உள்ள புனிதமான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.

தேவி அபய சூத்ரா

இது பிரதிஷ்டை செய்யப்பட்ட நூல். இதைக் கைகளில் அணிந்து கொள்வது ஒருவரின் லட்சியங்கள் பூர்த்தியடையவும், பய உணர்வுகளில் இருந்து விடுபடவும் துணை செய்யும். இதனால் ஒருவர் தன் முழுத் திறமைக்கேற்ப வாழ முடியும். பெண்கள் இடது மணிக்கட்டிலும் ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிய வேண்டும்.

நெய் தீபம்

தேவிக்கு அர்ப்பணையாக வழங்கப்படும் நெய் விளக்கை, லிங்கபைரவி திருக்கோவிலின் உட்புறம் உள்ள திரிசூலம் பகுதியில் ஏற்றிவைக்கலாம். தேவியின் அருளுக்கு முழுமையாகச் சரணடைவதை இது குறிக்கிறது.

கேஷ அர்ப்பணம்

தேவிக்கு முடி காணிக்கையாக அளிப்பது. தன் ஒரு பகுதியாக உள்ள ஒன்றை தேவிக்கு வழங்குவது சரணடைதலைக் குறிக்கிறது. இதனால் ஒருவர் உடல் ஆரோக்கியம் மற்றும் பிற நலன்களைப் பெறுகிறார்.

தாலி அர்ப்பணம்

திருமண உறவில் பிரச்சனை இருக்கும் பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை தேவியின் அருள் வேண்டி அர்ப்பணிக்கலாம்.

மாலை அர்ப்பணம்

அழகான, நறுமணமிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை உங்களுக்கு விருப்பமான நாளில் தேவியின் அளவற்ற கருணையைப் பெறும் விதமாக அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம்.

சமர்ப்பணம்

வேப்ப இலை, மல்லிகைப் பூ, வில்வ இலைகள், குங்குமம், மஞ்சள், கற்பூரம், நெய் விளக்கு, பிரசாதம், பாக்கு மற்றும் தேங்காய் ஆகிய அர்ப்பணைகள் அடங்கியதே சமர்ப்பணம் ஆகும். அர்ப்பணை செய்பவரும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இதனால் அதிக நலன்களைப் பெறுகின்றனர்.

மாங்கல்ய பல சூத்ரம்

இது மஞ்சளை சுற்றிக் கட்டப்பட்ட மஞ்சளில் தோய்க்கப்பட்ட நூல். இந்த நூலை லிங்கபைரவி திருக்கோயிலில் உள்ள திரிசூலத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும். இந்த அர்ப்பணை கணவரின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.

அபிஷேகம்

ஒவ்வொரு நாளும் 3 முறை 11 விதமான அர்ப்பணங்கள் லிங்கபைரவி தேவிக்கு அவள் அருள் வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒருவர் தனக்கு விருப்பமான நாளில் தங்களது பெயர் மற்றும் நட்சத்திரம் கொடுத்து அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோதானம்

செல்வம், வலிமை, செழிப்பு, தன்னலமற்ற தானம் மற்றும் சுகமான உலகியல் வாழ்க்கை இவற்றின் அடையாளமாகத் திகழும் பசுவை தேவிக்கு தானமாக அளிப்பது, தேவியின் அருளைப் பெறுவதற்கு மிகப் புனிதமான வழி இது.

லிங்கபைரவி வஸ்திரம்

தேவி வஸ்திரம் ஒருவரை எதிர்மறை ஆதிக்கத்தில் இருந்து காத்து நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய சக்தி வாய்ந்தது. முக்கோண வடிவில் உள்ள இந்த வஸ்திரத்தை ஒருவர் தன் கழுத்தைச் சுற்றியோ அல்லது தலையைச் சுற்றியோ அணிந்து கொள்ளலாம், அல்லது பூஜையறையிலோ, வீட்டின் முன்புறமோ, பணியிடத்திலோ அல்லது தனது வாகனத்திலோ வைத்துக்கொள்ளலாம்.

தேவியின் அருள் பெற உதவும் பிற வடிவங்கள்

பக்தர்கள் தேவியின் அருளை பல்வேறு வடிவங்களில் தங்கள் தேவைக்கேற்ப தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தேவி அபய சூத்ரா

விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சிவப்புக் கயிற்றை (அபய சூத்திரம்), ஒருவர் தன் கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வது, அவர் தனது குறிக்கோள்களை அடையவும், பயத்தை அகற்றவும் உதவுகிறது. இந்தக் கயிற்றை பெண்கள் இடது கை மணிக்கட்டிலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் குறைந்தது 40 நாட்கள் கட்டிக் கொள்ள வேண்டும்.

விஜயதசமி

குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் உகந்த தினம். லிங்கபைரவியில் ஒவ்வொரு வருடமும் இந்நாளில் வித்யாரம்பம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அன்னதானம்

நம் உயிரை வளர்க்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் ஒரு முக்கியமான, உயர்வான அர்ப்பணம் இது. உங்களுடைய திருமண நாள், பிறந்த நாள், வருடாந்திரக் கொண்டாட்டங்கள், நிச்சயதார்த்தம், முன்னோர் நினைவு நாள் அல்லது உங்கள் மனதுக்கு உகந்த நாட்களில் இந்த புனிதமான அர்ப்பணத்தைச் செய்ய முடியும்.

காலை 6.30 மணியிலிருந்து மதியம் 1.20 மணி வரையிலும், மாலை 4.20 மணியிலிருந்து இரவு 8.20 மணி வரையிலும் லிங்கபைரவி தேவியை தரிசிக்க முடியும். பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு 12.30 மணி வரை தேவியை தரிசிக்கலாம். சாதி, மதம், இனம், நாடு வேறுபாடின்றி அனைவரும் எல்லா அர்ப்பணங்கள் மற்றும் சடங்குகளிலும் கலந்து கொள்ளலாம். தினசரி அபிஷேக ஆரத்தி காலை 7.40 மணிக்கும், மதியம் 12.40 மணிக்கும், மாலை 7.40 மணிக்கும் நடைபெறும்.
பிறந்த நாட்கள், நிச்சயதார்த்தம், திருமணங்கள், கணவரின் 60ஆவது வயதில் நடக்கும் சஷ்டியப்த பூர்த்தி வைபவங்கள் ஆகியவற்றை தேவியின் முன்னிலையில் தேவியின் அருளுடன் கொண்டாடலாம்.

“நீங்கள் தேவியின் பக்தர் என்றால், உங்களால் புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற வழிகளில் அவள் உங்களுக்கு அருள் புரிவாள்.” – சத்குரு

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!