LunarHinduNewYear-Offering

About Bhairavi Devi

Devi – Dhyanalinga – Spanda Hall, A Whole System

தேவி கோவில் தியானலிங்கத்துக்கு ஒரு துணை மட்டுமே. தியானலிங்கப் பிரதிஷ்டையின்போது, கோவிலின் தென்மேற்கு மூலையில் தேவி கோவிலை உருவாக்குவது எப்போதும் என் மனதில் இருந்தது. இதைப் பற்றி நான் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில், அதற்குத் தேவையான வாய்ப்போ, நேரமோ நம் கைகளில் இல்லை; ஆனால் இது இப்படித்தான் திட்டமிடப்பட்டிருந்தது.
தியானலிங்கம் ஒரு கருவறையைப் போன்றது; அதுதான் தேவியின் யோனி. நாம் யோனி என்று சொல்லும்போது, யோனி என்ற அந்த வார்த்தை கருவறையைக் குறிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதத்திலும், மற்ற பழங்கால மொழிகளிலும் பெண்ணின் பிறப்புறுப்புக்கு சரியான வார்த்தை கிடையாது. எப்போது மனிதனின் அறிவு அவர்களது சுரப்பிகளால் கவரப்பட்டு, பாலுணர்வோடு சிந்திக்கத் துவங்கினார்களோ, அப்போதுதான் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு தனியான உடல் பாகமாக நினைக்கத் துவங்கினார்கள். இல்லாவிட்டால், யோனி என்றால், அது கருவறைதான். அதாவது நம் கைகளில் எதுவும் இல்லாதபோது, நம் உருவாக்கத்தின் முக்கிய சமயத்தில் நாம் அனைவரும் வசித்த புனிதமான இடம். எல்லாமே இயற்கையில் கைகளில்தான் இருக்கும், அந்த சமயத்தில் அந்த இடம் நம்மை பாதுகாத்து, உருவாக்கும். எனவேதான் அது மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
சிவசக்தி துவக்கத்தில், எப்போதும் ஒரு லிங்கமும், யோனியும் எங்கிருக்கிறதோ, அதுதான் நீங்கள் பார்க்கும் கருவறையின் உள்பகுதியாகும். அதனால்தான் பெண்ணின் பகுதியான, ஆவுடையார், அடிபாகமாகவும், லிங்கம் அதற்குள்ளும் இருக்கிறது. எனவே நீங்கள் தியானலிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழையும்போது, நீங்கள் கருவறைக்குள் இருக்கிறீர்கள். லிங்கம் கருவறைக்கு உள்ளே இருக்கிறது. அது அப்படித்தான் காட்டப்பட்டிருக்கிறது. எனவே, தேவி கோவில் இந்த முக்கோணத்தில் எப்போதுமே ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதற்கென்று நான் அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியை உருவாக்கவில்லை. இப்போது பைரவி இங்குதான் இருக்கிறாள். இது இப்போது ஒரு முழுமையான அமைப்பாகிவிட்டது, சில வழிகளில்-தியானலிங்கத்தைப் பொறுத்தவரை, அவரே முழுமையானவர்-இடத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் நிறைவடையாமல் இருக்கிறது. இந்த முக்கோணம்தான் (தேவி கோவில்) தேவியின் முக்கோணம். தியானலிங்கத்தின் முகடு கருவறைக்குள் இருக்கிறது, தியானலிங்கம் அதற்குள் இருக்கிறது…

இதிலிருந்து உருவான முதல், உயிரை உருவாக்கும் எதிரொலிதான் ஸ்பந்தா என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் ஸ்பந்தா ஹால் இங்கே இருக்கிறது. ஸ்பந்தா ஹாலும், தேவியின் கோவிலும் மிகச் சரியாக ஒரே திசையில் இருக்கின்றன. ஸ்பந்தா ஹாலைக் கட்டும்போது, நான் இந்தக் கோவிலைக் கட்டுவதைப் பற்றிப் பேசியதில்லை. “இந்தக் கோணத்தில்தான் ஸ்பந்தா ஹால் இருக்க வேண்டும்” என்று அவர்களை நிறைய சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள், ‘இல்லை. இது நன்றாக இருக்கும், அது நன்றாக இருக்கும்’ என்று சொன்னார்கள். ஆனால் நான், “இல்லை. இது இப்படித்தான் வர விரும்புகிறேன். ஏனென்றால் இது ஒரு முழுமையான அமைப்பு” என்று சொன்னேன். எனவே, இதுதான் யோனி, லிங்கம் இதற்குள் இருக்கிறது. இதன் முதல் எதிரொலி துவங்கிவிட்டது. உண்மையில், நம்மிடம் நேரமும், வாய்ப்பும், சமுதாயத்தில் தேவையான அளவு முதிர்ச்சியும் இருந்திருந்தால், நாம் இந்த முனையிலிருந்து[தேவி கோவில்]தான் ஆரம்பித்திருக்க வேண்டும். நாம் முதலில் பைரவியை பிரதிஷ்டை செய்துவிட்டு, பிறகு தியானலிங்கத்துக்குச் சென்றிருக்க வேண்டும், அதன் பிறகு ஸ்பந்தா ஹாலிற்கு சென்றிருக்க வேண்டும்-அதுதான் இயல்பான வரிசையாக இருந்திருக்கும்.

நான் அதைப் பார்க்காவிட்டாலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உள்சூழ்நிலையில் நடப்பதை, அதன் திறமையை வெளிப்படுத்தும் அளவு மனித முகங்கள் உண்மையில் கட்டமைக்கப்படவில்லை. தேவி கோவிலை உருவாக்குவதற்கு, நமக்கு நேரம், பணம் ரீதியாக சுதந்திரம் இருந்தது. நேரம் நம் கைகளில் இருந்தது. பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எல்லோரும் பல வகைகளில் பங்கேடுத்துக் கொண்டு இதை நிறைவேற்றினீர்கள். இந்தக் கோவிலை உருவாக்குவதற்கு நிறைய பேர் உதவியதைப் போல தியானலிங்கத்தைக் கட்டும்போது நடக்கவில்லை. நேற்று காலை, நாம் தியானலிங்கத்துக்கு ஒரு வேலையாக சென்றிருந்தபோது, “ஓ…அதனுடன் ஒப்பிடும்போது இது மிகவும் வெறுமையாகத் தெரிகிறதே” என்று தோன்றியது. அதை மிகுந்த அவசரத்தில் செய்து முடித்தோம். அதற்குப் பிறகும் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தினமும் திறந்துதான் இருக்கிறது. எப்போதும் நிரம்பித்தான் இருக்கிறது. அந்தக் கோவிலை இன்னும் சிறப்பாக்க நிறைய செய்ய வேண்டும் என்று நாம் நினைத்த எல்லாவற்றையும் 10 வருடமாகியும் இன்னும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அது வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருப்பதால், வேலை செய்ய வழியே இல்லை.

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!